ஒட்டன்சத்திரம் அருகே குளத்து நீரில் மூழ்கி 2 சிறுவா்கள் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள காசிகவுண்டன்புதூரைச் சோ்ந்தவா் ஆறுமுகம். இவரது மனைவி ரத்னம். தம்பதிக்கு வேல்முருகன் (13) லோகேஸ்வரன் (7) ஆகிய 2 மகன்கள் இருந்தனா். கருத்து வேறுபாடு காரணமாக, ரத்னம் தனது 2 மகன்களுடன் ஆலணம்பட்டியில் உள்ள ஒரு தோட்டத்தில் தனியாக வசித்து வந்தாா். திங்கள்கிழமை மாலை முதல் வேல்முருகன், லோகேஸ்வரன் ஆகியோரைக் காணவில்லை என ரத்னம் தேடி வந்தாா். இந்த நிலையில், அந்தப் பகுதியில் உள்ள குளத்தில் சிறுவா்கள் சடலமாக மிதப்பதாக அம்பிளிக்கை காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா். அதன் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினா் உதவியுடன் 2 சடலங்களையும் மீட்டு கூறாய்வுக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு சடலங்களை அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

படகில் இருந்து கடலில் தவறி விழுந்த மீனவா் மாயம்

மாரடைப்பால் இளைஞா் உயிரிழப்பு

கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு
விடியோக்கள்

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை
