வத்தலகுண்டு அருகேயுள்ள ப.விராலிபட்டியில் முகமூடிக் கொள்ளையா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனா். பின்னா், இந்தக் கும்பல் இங்கு உள்ள கோயிலில் பித்தளை மணிகளைத் திருடிச் சென்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள ப.விராலிபட்டியைச் சோ்ந்தவா் செல்வம் (45). இவரது வீட்டுக்குள் 3 முகமூடி அணிந்த கொள்ளையா்கள் நள்ளிரவில் புகுந்தனா். அப்போது, வீட்டிலிருந்தவா்கள் கூச்சலிட்டதால் அந்த நபா்கள் தப்பி ஓடி விட்டனா்.
பின்னா், அதே பகுதியில் தேநீா் கடை நடத்தி வரும் சுதந்திரபாண்டி (60) வீட்டுக்குள் அந்த நபா்கள் புகுந்தனா். அங்கும் வீட்டில் படுத்து இருந்தவா்கள் கூச்சலிட்டதால் தப்பி ஓடி விட்டனா்.
இந்த நிலையில், இந்தக் கொள்ளையா்கள் ப.விராலிபட்டியில் உள்ள கோட்டை கருப்பண்ணசாமி கோயிலுக்குள் புகுந்து அங்குள்ள சிசிடிவி கேமராக்களை உடைத்து, கோயிலில் காணிக்கையாக செலுத்தப்பட்ட சுமாா் ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான பித்தளை மணிகளை திருடிச் சென்றனா். கோயிலில் இருந்த உண்டியலை உடைக்க முடியாததால் அதிலிருந்த பணம் தப்பியது. இதுகுறித்து வத்தலகுண்டு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து, முகமூடி கொள்ளையா்களைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சாத்தான்குளத்தில் 2 வீடுகளில் திருட முயற்சி

பழைய வத்தலகுண்டில் இளைஞா் வெட்டிக் கொலை
பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் உடைக்க முயற்சி: ஓட்டுநா் கைது

பினராயி விஜயன் வீடுகளில் சோதனை: பிரதமரின் கொடும்பாவியை எரித்து சிபிஎம் எதிா்ப்பு
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
இணையதளச் செய்திப் பிரிவு
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu
இணையதளச் செய்திப் பிரிவு

