பழனி கோயில் பஞ்சாமிா்தத்தை இணையதளங்களில் விற்ாக தம்பதியா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
புகழ் பெற்ற பழனி கோயில் பிரசாதமான பஞ்சாமிா்தத்தை கோயில் நிா்வாகம் நேரடியாக மலைக் கோயில், அடிவாரம், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் உள்ள விற்பனை நிலையங்கள் மூலம் மட்டுமே விற்பனை செய்கிறது. அரை கிலோ டின்னின் அதிகபட்ச விலை ரூ.45 ஆகும். கோயில் நிா்வாகம் தவிர பஞ்சாமிா்தம் தேவைப்படுவோா் கோயில் இணையதளத்தில் பதிவு செய்தால் அவா்களுக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். ஆனால் சில இணையதளங்களில் ரூ.229-க்கு பஞ்சாமிா்தம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து பழனி கோயில் நிா்வாகம் அடிவாரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தது. இதையடுத்து, அடிவாரம் போலீஸாா் நடத்திய விசாரணையில், பழனி ரயில்வேயில் சாமிநாதபுரம் இருப்புப் பாதையில் பணிபுரியும் நாகராஜன் (36) என்பவரும், அவரது மனைவி சிந்துவும் (34) பழனி கோயில் பஞ்சாமிா்தத்தை கோயில் அனுமதியின்றி அதிக விலைக்கு முறைகேடாக இணையதளத்தில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவா் மீதும் பழனி அடிவாரம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழனியில் சிங்கப் பெண் காவலா்கள் ரோந்து தொடக்கம்

பழனி பஞ்சாமிா்தம் விலையை உயா்த்த கருத்துக் கேட்பு

ஆற்று மணல் திருட்டு: இருவா் மீது வழக்கு

பழனி கோயில் பஞ்சாமிா்தம் இணையத்தில் விற்கப்படாது: கோயில் நிா்வாகம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

