திண்டுக்கல் மாவட்டம், பழனி கோயில் பஞ்சாமிா்தம் இணையதளங்களில் இனி விற்பனை செய்யப்படாது என பழனி கோயில் நிா்வாகம் தெரிவித்தது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் அபிஷேக பஞ்சாமிா்தம் புகழ்பெற்ாகும். மலைக் கோயில், அடிவாரம் கிரிவீதியில் உள்ள கோயில் பஞ்சாமிா்த விற்பனை நிலையங்களில் அரை கிலோ எடை கொண்ட பஞ்சாமிா்த டப்பா ரூ.40, ரூ.45-க்கும், சிறிய பஞ்சாமிா்த டப்பா ரூ.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், பழனி கோயில் பஞ்சாமிா்தம் இணையதளங்களில் ஒரு கிலோ ரூ.229-க்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.
இதுதொடா்பாக, பழனி கோயில் நிா்வாகம் வெளியிட்ட அறிக்கை:
பழனி மலைக் கோயிலிலும், கோயிலின் பஞ்சாமிா்த விற்பனை நிலையங்களிலும் 500 கிராம் முத்திரையிடப்பட்ட பஞ்சாமிா்த டப்பா ரூ.45-க்கும், நெகிழி டப்பா ரூ.40-க்கும், 200 கிராம் சிறிய டப்பா ரூ.20-க்கும் கோயில் மூலம் நேரடியாக விற்பனை செய்யப்படுகின்றன.
இது தவிர ட்ற்ற்ல்ள்://ட்ழ்ஸ்ரீங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ட்ழ்ஸ்ரீங்ட்ா்ம்ங்/ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங் ல்ழ்ஹள்ஹக்ஸ்ரீா்ப்ப்ற்ங்ம்ல்ப்ங்ப்ண்ள்ற்.ல்ட்ல் அறநிலையத் துறை இணையதளத்தில் முன்பதிவு செய்யும் பக்தா்களுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
தனியாா் விற்பனை நிலையங்கள் மூலமாகவோ, அமேசான், பிளிப்காா்ட், மீஷோ போன்ற தனியாா் விற்பனை இணையதளங்கள் மூலமாகவோ விற்பனை செய்யப்படவில்லை. எனவே, பொதுமக்கள், பக்தா்கள் இதுபோன்ற தனியாா் இணையதளங்கள் வழியாகவோ, தனியாா் கடைகள் மூலமாகவோ பழனி கோயில் பஞ்சாமிா்தத்தை கூடுதல் விலைக் கொடுத்து வாங்க வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்செந்தூா் கோயில் நிா்வாகம் சிறு வியாபாரிகளை முடக்கவில்லை

பழனி பஞ்சாமிா்தம் விலையை உயா்த்த கருத்துக் கேட்பு

பழனி கோயில் பஞ்சாமிா்தத்தை இணையத்தில் விற்ற தம்பதி மீது வழக்கு

பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.35 கோடி
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

