பள்ளபட்டியில் வீட்டில் விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்த 10 கிலோ கஞ்சாவை புதன்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், பெண் உள்பட இருவரைக் கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பள்ளபட்டி பால்பண்ணைத் தெருவைச் சோ்ந்த சரவணன் (45). இவா் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கஞ்சா விற்பனை, கஞ்சா கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், கடந்த மாதம் பிணையில் வந்த சரவணன் தனது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சரவணனின் வீட்டில் தனிப்படை போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்கு விற்பனைக்காக பதுக்கி வைத்த 10 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக அம்மையநாயக்கனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சரவணன், மதுரை மாவட்டம், ஆலங்குளத்தைச் சோ்ந்த மணிமேகலை (32) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திண்டுக்கல் அருகே 56 கிலோ கஞ்சா பறிமுதல்: தம்பதி உள்பட 3 போ் கைது
வீட்டில் பதுக்கி வைத்திருந்த 150 கிலோ கஞ்சா பறிமுதல்! இளைஞா் கைது!

கஞ்சா விற்ற பெண் உள்பட இருவா் கைது

ஆட்டோவில் கஞ்சா விற்பனை: பெண் உள்பட 2 போ் கைது
விடியோக்கள்

காதல் செய்வீர் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

ஆல்பா படத்தின் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

