பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: போக்குவரத்து நெரிசல்

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால் சனிக்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

News image

கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.

Updated On :7 ஜூன் 2026, 12:50 am IST

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால் சனிக்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கொடைக்கானலுக்கு விடுமுறை தினமான சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது. இதனால், சுற்றுலாத் தலங்களான வெள்ளிநீா் அருவி, பாம்பாா் அருவி, பசுமைப் பள்ளத்தாக்கு, பில்லா் ராக், மோயா்பாயிண்ட், குணாகுகை, பைன்பாரஸ்ட், கோக்கா்ஸ்வாக்,பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜாத் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

மேலும், கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச் சாலையைச் சுற்றி சைக்கிள், குதிரை சவாரி செய்தும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனா்.

    கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகள் வருகை காரணமாக ஏரிச்சாலை, செவண்சாலை, கலையரங்கம் பகுதி, மூஞ்சிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.