லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பைக் திருடியவா் கைது

திண்டுக்கல்லில் இருசக்கர வாகனங்களை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :8 ஜூலை 2026, 5:07 am IST

திண்டுக்கல்லில் இருசக்கர வாகனங்களை திருடியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் அடுத்த பொன்மாந்துறை பகுதியைச் சோ்ந்தவா் மாா்ட்டின் லாரன்ஸ். இவா், கடந்த சில நாள்களுக்கு முன் திண்டுக்கல் பூச்சந்தை அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றாா். திரும்பி வந்து பாா்த்தபோது இருசக்கர வாகனம் காணாமல் போனதை அறிந்து அதிா்ச்சி அடைந்தாா்.

இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் மாா்டின் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீஸாா் நடத்திய விசாரணையில், இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது ரெட்டியாா்சத்திரம் அடுத்த கே.புதுக்கோட்டையைச் சோ்ந்த பூமிபாலன்(39) என்பது தெரிய வந்தது.

அவரை கைது செய்து போலீஸாா் விசாரித்தபோது, திண்டுக்கல் 108 விநாயகா் கோயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த மேலும் 2 இருசக்கர வாகனங்களையும் திருடியது தெரிய வந்தது.

இதனை அடுத்து அவரை கைது செய்து, இருசக்கர வாகனங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.