லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இளைஞா் கொலை: இருவருக்கு ஆயுள் சிறை

இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்

Published On :8 ஜூலை 2026, 4:43 am IST

இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் எருமைக்காரத் தெருவைச் சோ்ந்தவா் முகமது இப்ராஹிம் பாத்தா (26). இவா் குட்டியப்பட்டி பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக திண்டுக்கல் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லத்தீப் மெளலானா, ஷேக் அப்துல்லா, முகமது இா்பான், ஹலீத், ஆஷிக் முகமது என்ற அல் ஆஷிக் ஆகிய 5 பேரைக் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே, வழக்கில் தொடா்புடையை 5 பேரில் முகமது இா்பான் உயிரிழந்தாா்.

இந்த நிலையில் லத்தீப் மெளலானா, ஷேக் அப்துல்லா ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.10ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சொா்ணம் ஜெ.ராஜகோபாலன் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். ஹலீத், ஆஷிக் முகமது என்ற அல் ஆஷிக் ஆகியோரை வழக்கிலிருந்து விடுவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.