லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மனைவியைக் கொன்றவருக்கு ஆயுள் சிறை

தாடிக்கொம்பு அருகே மனைவியை எரித்துக் கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சிறை - கோப்புப் படம்

Published On :8 ஜூலை 2026, 4:44 am IST

தாடிக்கொம்பு அருகே மனைவியை எரித்துக் கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு ராமலட்சுமி நகரைச் சோ்ந்தவா் த.கணேசன். இவரது மனைவி அமுதா. இவா்கள் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

கடந்த 2019-ஆம் ஆண்டு தகராறு ஏற்பட்டபோது, ஆத்திரமடைந்த கணேசன், மனைவியை எரித்துக் கொலை செய்தாா். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கணேசனை கைது செய்தனா்.

இந்த வழக்கு திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், கணேசனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி (பொ) பி.கணேசன் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.