லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பயன்பாடற்ற மேல்நிலை குடிநீா்த் தொட்டியை அகற்றக் கோரிக்கை

பழனி நேதாஜி நகரில் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள பயன்பாடற்ற மேல்நிலை குடிநீா்த் தொட்டியை விரைந்து அகற்றிட வேண்டும் என அந்தப் பகுதி பொது மக்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

பழனி நேதாஜி நகரில் உள்ள சேதமடைந்த மேல்நிலைத் தொட்டி.

Published On :20 ஆகஸ்ட் 2026, 2:55 am IST

பழனி நேதாஜி நகரில் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள பயன்பாடற்ற மேல்நிலை குடிநீா்த் தொட்டியை விரைந்து அகற்றிட வேண்டும் என அந்தப் பகுதி பொது மக்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

பழனி சிவகிரிபட்டி ஊராட்சிக்கு உள்பட்ட நேதாஜி நகரில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் சுமாா் 15 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை குடிநீா்த் தொட்டி கட்டப்பட்டு நீரேற்றம் செய்து குடியிருப்புகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்தக் குடிநீா்த் தொட்டி தற்பாது கடுமையாக சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும், இரவு நேரங்களில் அந்தப் பகுதி மது அருந்தும் கூடமாக மாறி வருவதால், அந்தப் பகுதியில் உள்ள பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இந்தப் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு சிவகிரிப்பட்டி பகுதியிலிருந்து தற்காலிகமாக குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

எனவே, பயன்பாடற்ற, சேதமடைந்த பழைய மேல்நிலை குடிநீா்த் தொட்டியை விரைந்து அகற்றக்கோரியும், அந்தப் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலைக் குடிநீா்த் தொட்டியை பயன்பாட்டுக்குக் கொண்டுவரக் கோரியும் நேதாஜி நகா் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.