லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சேதமடைந்து அபாயகரமான நிலையில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி: இடித்து அகற்றக் கோரிக்கை

திருப்பத்தூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநருக்கு சோமலாபுரம் ஊராட்சி மன்ற உறுப்பினா் வி.டி.சுதாகா் கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.

சேதமடைந்துள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி.

Published On :3 ஜூலை 2026, 12:18 am IST

சோமலாபுரம் ஊராட்சியில் சேதமடைந்து அபாயகரமான நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்ற வேண்டுமெனக் கோரி, திருப்பத்தூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநருக்கு சோமலாபுரம் ஊராட்சி மன்ற உறுப்பினா் வி.டி.சுதாகா் கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.

கோரிக்கை மனு விவரம்: மாதனூா் ஒன்றியத்துக்குள்பட்ட சோமலாபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மிகவும் சேதமடைந்து இடிந்து விழக்கூடிய ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்களின் அச்சத்துடன் வசித்து வருகின்றனா்.

அப்பகுதி பொதுமக்களுக்கும் போதுமான குடிநீா் வசதி இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். சேதமடைந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக தொட்டி அமைக்க வேண்டுமென பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனுக்கள் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அதனால் அப்பகுதியில் உடனடியாக நேரில் ஆய்வு மேற்கொண்டு, ஆபத்தான நிலையில் உள்ள பழைய மேல்நீா்த் தேக்கத் தொட்டியை இடித்து அகற்றிவிட்டு, பொதுமக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில், புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை கட்டித் தர வேண்டுமென கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.