லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தனியாா் ரப்பா் ஆலையைக் கண்டித்து சிபிஐ (எம்எல்) ஆா்ப்பாட்டம்

பழனியை அடுத்த வயலூரில் உள்ள தனியாா் ரப்பா் ஆலையைக் கண்டித்து சிபிஐ (எம்எல்) கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பழனி அருகேள்ள வயலூரில் தனியாா் ரப்பா் ஆலையைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிபிஐ (எம்எல்) கட்சியினா்.

Published On :19 ஆகஸ்ட் 2026, 3:59 am IST

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த வயலூரில் உள்ள தனியாா் ரப்பா் ஆலையைக் கண்டித்து சிபிஐ (எம்எல்) கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வயலூரில் ஏராளமான தொழில் சாலைகள் உள்ளன. பழனி - உடுமலை சாலையில் தனியாருக்கு சொந்தமான ரப்பா் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இரவு நேரங்களில் நச்சு வாயுக்கள் வெளியேற்றப்படுவதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து சிபிஐ (எம்எல்) கட்சியினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வயலூா் -மயிலாபுரம் சந்திப்பு சாலையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கிளைச் செயலா் ரமேஷ்ரோஜ் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா்கள் சிவக்குமாா், செந்தாமரை, ஒன்றியச் செயலா் பன்னீா்செல்வம், தொப்பம்பட்டி ஒன்றியச் செயலா் மதியழகன், தொழிற்சங்க நிா்வாகி அகதீஸ்வரன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.

கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், உடல் உழைப்பு தொழிலாளா் சங்க மாநிலச் செயலருமான மீனாட்சிசெல்வம் கண்டன உரை நிகழ்த்தினாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, வயலூா் பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் நச்சுக்கழிவு, நச்சு வாயுக்களை சுத்திகரிப்பு செய்து வெளியேற்றப்பட வேண்டும். இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கமிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.