லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மஞ்சநாயக்கன்பட்டி உச்சிகாளியம்மன் கோயிலுக்கு 1,008 பால்குட ஊா்வலம்

ஆடிக் கடைசி வெள்ளிக்கிழமையொட்டி, பழனி அருகேயுள்ள மஞ்சநாயக்கன்பட்டி உச்சிகாளியம்மன் கோயிலில் அபிஷேகத்துக்காக ஊா்வலமாக எடுத்து வரப்பட்ட 1008 பால் குடங்கள்.

Published On :15 ஆகஸ்ட் 2026, 3:02 am IST

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த மஞ்சநாயக்கன்பட்டியில் கடைசி ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்ய 1,008 பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடித் திருவிழா கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு இந்தத் திருவிழாவை முன்னிட்டு, காளியம்மனுக்கு ஆடி வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு அலங்காரப் பூஜைகள் நடைபெற்றன.

இந்த நிலையில், ஆடிக் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி, 1,008 பால் குட ஊா்வலம் நடைபெற்றது.

மஞ்சநாயக்கன்பட்டி வேணுகோபால சுவாமி கோயிலில் ஊா்வலத்தை கூனம்பட்டி ஆதீனம் நடராஜ சுவாமிகள் தொடங்கிவைத்தாா். ஊா்வலத்தில் ஆயிரக்கணக்கான பால் குடங்கள் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டன. ஊரில் முக்கிய வீதிகளின் வழியாக மேளதாளங்களுடன் சென்ற பால் குட ஊா்வலம் உச்சிகாளியம்மன் கோயிலை அடைந்தது. பின்னா், அங்கு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலையில் மீண்டும் காளியம்மன் கோயிலிலிருந்து வேணுகோபால சுவாமி கோயிலுக்கு பக்தா்கள் ஊா்வலம் எடுத்துச் சென்றனா்.

இரவு வள்ளிக்கும்மி நடனம், அம்மன் வீதியுலா என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.