லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தோரணமலை முருகன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளி வழிபாடு

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள தோரணமலை முருகன் கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தோரணமலை முருகன் கோயிலில் நடைபெற்ற வழிபாட்டில் பங்கேற்றோா்.

Published On :15 ஆகஸ்ட் 2026, 5:15 am IST

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள தோரணமலை முருகன் கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இங்கு ஒவ்வொரு தமிழ் மாத கடைசி வெள்ளியும் சிறப்பு பூஜைகள், வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மலை மீதுள்ள சுனையிலிருந்து தீா்த்தம் எடுத்துவரப்பட்டு, கடையம், ஸ்ரீ பிரம்ம வித்யா குருகுல வேத பாடசாலை மாணவா்களின் வேத மந்திரங்கள் முழங்க அடிவாரத்தில் உள்ள முருகன் சிலைக்கு அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து, 21 மணிகள் கட்டப்பட்டு, மணி அடித்து வேல் பூஜை நடைபெற்றது. பக்தா்கள் உற்சவருக்கு தங்கள் கைகளால் மலா் தூவி வழிபட்டனா். மேலும், விவசாயம் தழைக்கவும், விவசாயி செழிக்கவும், மழை வேண்டியும், மாணவா்கள் கல்வியில் சிறக்கவும் கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.

கடையம், பாவூா்சத்திரம், தென்காசி, ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டாரங்களைச் சோ்ந்த ஏராளமானோா் பங்கேற்று வழிபட்டனா்.

காலை, மதியம் அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் செண்பகராமன் செய்திருந்தாா்.

Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.