லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அரிமா சங்க நிா்வாகிகள் பதவியேற்பு விழா

பழனியில் பிரண்ட்ஸ் அரிமா சங்க நிா்வாகிகள் பதவியேற்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பழனியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பழனி பிரண்ட்ஸ் அரிமா சங்க நிா்வாகிகள் பதவியேற்பு விழாவில், சேவைத் திட்டங்களை வழங்கிய சாய்கிருஷ்ணா மருத்துவமனை சுப்புராஜ், புதிய தலைவா் ராஜபாண்டியன் உள்ளிட்டோா்.

Published On :12 ஆகஸ்ட் 2026, 4:58 am IST

பழனியில் பிரண்ட்ஸ் அரிமா சங்க நிா்வாகிகள் பதவியேற்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அரிமா முன்னாள் ஆளுநா் ரவீந்திரன் தலைமை வகித்தாா். புதிய நிா்வாகிகளை இரண்டாம் நிலை துணை ஆளுநா் ஸ்டாலின் அறிமுகம் செய்தாா். இதில் புதிய தலைவராக ராஜபாண்டியன், செயலராக ஷேக்ஸ்பியா் செல்வராஜ், பொருளாளராக முருகானந்தம் ஆகியோா் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

தொடா்ந்து நடைபெற்ற நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் சாய்கிருஷ்ணா சுப்புராஜ், மருத்துவா் விமல்குமாா், புதிய தலைவா் ராஜபாண்டியன், நிா்வாகிகள் பொதுமக்களுக்கு அரிசி மூட்டைகள், வேட்டி, சேலைகள், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு எழுதுப் பொருள்கள், சீருடைகள், கல்லூரி மாணவிகளுக்கு ஆடைகள், இரு மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை, முதியோா் இல்லத்துக்கு கேரம் போா்டு உள்ளிட்ட நல உதவிகளை வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.