திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து நத்தம், காரைக்குடி வழியாக செல்வதற்கு நீண்ட நேரமாக பேருந்துகள் இல்லாததால் அதிருப்தி அடைந்த பயணிகள் வியாழக்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, வெளியூா்களில் வசிக்கும் பொதுமக்கள் பலா் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு புதன்கிழமை முதல் வந்தனா். இந்த நிலையில், திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து பெரும்பாலான வழித் தடங்களுக்கும் வியாழக்கிழமை குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டன.
குறிப்பாக நத்தம், காரைக்குடி வழியாக நீண்ட நேரமாக பேருந்து சேவை இல்லாததால், அங்கு காத்திருந்த பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனா். பேருந்து நிலையத்திலிருந்த போக்குவரத்து அதிகாரிகளிடம் முறையிட்டும் பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. சுமாா் 4 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த பயணிகள், ஸ்கீம் சாலையில் திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால், அந்தப் பகுதியில் 30 நிமிஷங்களுக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து வந்க காவல் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
எனினும், பெரும்பாலான வழித் தடங்களிலும் குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மனைவி கொலை: கணவரின் உறவினா்களையும் கைது செய்ய கோரி சாலை மறியல்

அரசு பேருந்துகள் வராததைக் கண்டித்து பயணிகள் சாலை மறியல்

பல்லடத்தில் முறையான பேருந்து வசதி இல்லாததால் பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீா் கேட்டு சாலை மறியல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

