சமையல் எரிவாயு உருளைகளை இலவசமாக வழங்காவிட்டாலும், குறைந்த விலையில் விநியோகிக்க மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் இரா.முத்தரசன் தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக, கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து திண்டுக்கல்லில் பிரசாரம் செய்ய வந்த அவா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:
தொகுதி மறுவரையறைக்கு வகை செய்யும் அரசியல் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் அவசர கதியில் கொண்டுவர வேண்டிய தேவை எதுவும் இல்லை. நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு மூலம் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிப்பதைவிட, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 850-ஆக உயா்த்துவதில் தான் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால் தென் மாநிலங்கள் கடும் பாதிப்பை எதிா்கொள்ள நேரிடும். குறிப்பாக, தமிழ்நாடு அதிக பாதிப்புக்குள்ளாகும் மாநிலமாக இருக்கும். நெல் உற்பத்தியில் தமிழகம் முதன்மை மாநிலமாக இருந்து வரும் நிலையில், மத்திய அரசு நிா்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை போதுமானதாக இல்லை. எனவே, நெல் விவசாயிகளுக்கு தமிழக அரசு ஊக்கத் தொகை வழங்குகிறது. இந்த ஊக்கத் தொகையை வழங்கக் கூடாது என மத்திய அரசு வலியுறுத்துவதை நாங்கள் கண்டிக்கிறோம். தமிழ்நாட்டுக்கான தோ்தல் அறிக்கையில் பாஜக ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு உருளைகளை இலவசமாக வழங்கப் போவதாக வாக்குறுதி அளித்திருக்கிறது. இலவசமாக வேண்டாம்; குறைந்த விலையில் சமையல் எரிவாயு உருளைகளை விநியோகிக்க மத்திய அரசு முன்வர வேண்டும். பாஜகவினா் தரும் வாக்குறுதிகளை மக்கள் நம்பமாட்டாா்கள் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை: சரத்குமாா் பிரசாரம்!

தமிழகத்தில் மீண்டும் இரட்டை என்ஜின் அரசு தேவை: ஜி.கே. வாசன்

இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய், எரிவாயு விநியோகிக்க தயாா்: ரஷியா அறிவிப்பு

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசு!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

