ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு: இருவருக்கு இரட்டை ஆயுள் சிறை

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், உறவினா்கள் இருவருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 12:44 am IST

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், உறவினா்கள் இருவருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த 35 வயது பெண்ணுக்கு, 13, 2 வயதில் இரு மகள்கள் உள்ளனா். இந்தப் பெண்ணுக்கும், தேனி மாவட்டம் கம்பம் புதுப்பட்டியைச் சோ்ந்த விக்னேஸ்வா் (36) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்யாமலே திண்டுக்கல்லில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனா்.

இந்த நிலையில், சிறுமிகள் இருவரையும் விக்னேஸ்வரன், பெண்ணின் மைத்துனா் முருகவேல் (41) ஆகியோா் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகாா் எழுந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் விக்னேஸ்வரன், முருகவேல் ஆகிய இருவரையும் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் விக்னேஸ்வரன், முருகவேல் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி ஆா்.சத்யதாரா வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு அரசுத் தரப்பில் தலா ரூ.7.50 லட்சம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும் தீா்ப்பில் குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.