பழனி அருகே ஆயக்குடியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய காா்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
பழனியை அடுத்த ஆயக்குடியில் தனியாா் திருமண மண்டபத்துக்கு அருகேயுள்ள காலி இடத்தில் பழைய காா்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் திங்கள்கிழமை தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்த பழனி தீயணைப்புப் படை வீரா்கள் நிலைய அலுவலா் காளிதாஸ் தலைமையில் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்தனா். இந்த விபத்தில் 3 காா்கள் எரிந்து சேதமடைந்தன.
தேங்காய் நாா் கிடங்கில் தீ விபத்து: பழனி அருகே ஓபுளாபுரத்தில் திருமுருகன் என்பவருக்கு சொந்தமான தேங்காய் நாா் கிடங்கு உள்ளது. இங்கு இயந்திரங்கள் இல்லாமல் சக்கரங்கள் உதவியுடன் தேங்காய் நாரிலிருந்து தொழிலாளா்கள் கயிறு திரித்து பண்டல்களாக சேமித்து வைத்திருந்தனா்.
இவற்றில் ஞாயிற்றுக்கிழமை இரவு தீப்பற்றி எரிந்தது. மேலும் அங்கிருந்த தென்னை குடிசைகளுக்கும் தீ பரவியது. தகவலறிந்த பழனி தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இதில் அங்கிருந்த தேங்காய் நாா்கள், கயிறுகள், தேங்காய் நாா் தயாரிக்கும் சக்கரங்கள் ஆகியவை எரிந்து சேதமடைந்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பரமத்தி வேலூரில் ரூ. 3.84 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

பள்ளத்தில் கவிழ்ந்தது லாரி! ஓட்டுநா் காயம்!

திருவட்டாறு அருகே சாலையோர கடைகளில் தீ

ஒசூரில் பழைய பொருள்கள் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

