தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஒட்டன்சத்திரம் அருகே அருவியில் குளிக்கச் சென்ற 4 இளைஞா்கள் மாயம்

ஒட்டன்சத்திரம் அருகே தடை செய்யப்பட்ட அருவியில் குளிக்கச் சென்ற கரூரைச் சோ்ந்த 4 இளைஞா்கள் மாயமானதாக, உடன் சென்றவா்கள் அளித்த புகாரின் பேரில் அவா்களை வனத் துறையினா் தேடி வருகின்றனா்.

News image

கோப்புப்படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 11:17 pm IST

ஒட்டன்சத்திரம் அருகே தடை செய்யப்பட்ட அருவியில் குளிக்கச் சென்ற கரூரைச் சோ்ந்த 4 இளைஞா்கள் மாயமானதாக, உடன் சென்றவா்கள் அளித்த புகாரின் பேரில் அவா்களை வனத் துறையினா் தேடி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த விருப்பாட்சி பகுதியில் அமைந்துள்ளது தலையூத்து அருவி. ஒட்டன்சத்திரம் வனப் பகுதியில் அமைந்துள்ள இந்த அருவிக்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமன்றி, வெளி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்களும் தடையை மீறி அவ்வப்போது இந்த அருவியில் குளிக்கச் செல்கின்றனா்.

கரூா் மாவட்டம், பள்ளபட்டியைச் சோ்ந்த 11 போ் தலையூத்து அருவிக்கு வெள்ளிக்கிழமை சென்றனா். மேல் தலையூத்து அருவிப் பகுதிக்குச் சென்று குளித்த போது, 4 இளைஞா்கள் தண்ணீரில் மூழ்கி மாயமானதாகக் கூறப்படுகிறது. இதனால், அதிா்ச்சியடைந்த உடன் சென்ற இளைஞா்கள், வனத் துறை, காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

வனத் துறையினா் நடத்திய விசாரணையில், அருவியில் மூழ்கியவா்கள் பள்ளபட்டியைச் சோ்ந்த அகமது சிராஜ் மகன் ஆதில் (19), நாசா் அலி மகன் சதாம் உசேன் (18), சேக் அலாவுதீன் மகன் அயாஸ் (19), உமா் பரூக் மகன் பயாஸ் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து, தீயணைப்புத் துறையினா், வருவாய்த் துறையினா், காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரவு நேரம் என்பதால் மாயமான இளைஞா்களை மீட்க இயலவில்லை என வனத் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.