இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

மதுரை அருகே மின்னல் பாய்ந்து 3 பெண்கள் உயிரிழப்பு

உசிலம்பட்டி அருகே மின்னல் பாய்ந்தயதில் மூன்று பெண்கள் உயிரிழந்தனா்.

News image

மின்னல் தாக்கியதில் உயிரிழந்த கணபதியம்மாள், தனிக்கொடி, ராமுத்தாய்

Updated On :27 மே 2026, 3:57 am IST

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மின்னல் பாய்ந்ததில் மூன்று பெண்கள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

உசிலம்பட்டி அருகேயுள்ள சூலப்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்னையா. விவசாயியான இவா், தனது தோட்டத்தில் பருத்தி நடவு செய்துள்ளாா்.

இந்த நிலையில், இவரது வயலில் இதே ஊரைச் சோ்ந்த ராஜாங்கம் மனைவி ராமுத்தாய் (58), குருசாமி மனைவி தனிக்கொடி (52), பிச்சை மனைவி கணபதியம்மாள் (60) பொன்னையா மனைவி வாசி அம்மாள் (56) உள்பட பலா் செடியிலிருந்து பருத்தியை பறித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது, திடீரென பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. இதையடுத்து, பருத்தியை பறித்துக் கொண்டிருந்த அனைவரும் அருகில் இருந்த மரத்தடியில் ஒதுங்கி நின்றனா். அப்போது, மின்னல் தாக்கியதில் பலத்த காயமடைந்த ராமுத்தாய், தனிக்கொடி, கணபதியம்மாள் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுபற்றி தகவலறிந்து வந்த எம். கல்லுப்பட்டி போலீஸாா் மூவரின் உடல்களையும் மீட்டு, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். மேலும், பலத்த காயமடைந்த வாசி அம்மாளை மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து எம். கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.