பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

போதைப் பொருள்கள் புழக்கம் 3 மாதங்களுக்குள் கட்டுப்படுத்தப்படும்: அமைச்சா் நிர்மல்குமார்

தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கம் வருகிற 3 மாதங்களுக்குள் கட்டுப்படுத்தப்படும் என மாநில மின் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

News image

அமைச்சா் நிர்மல்குமார்

Updated On :17 மே 2026, 2:00 am IST

தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கம் வருகிற 3 மாதங்களுக்குள் கட்டுப்படுத்தப்படும் என மாநில மின் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது: மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தவெக அரசு செயல்படுகிறது. தமிழகத்தில் குட்கா, போதைப் பொருள்கள் புழக்கத்தைத் தடுக்க அரசு உரிய முக்கியத்துவம் அளித்து வருகிறது. வருகிற 2 அல்லது 3 மாதங்களுக்குள் போதைப் பொருள்கள் புழக்கம் உறுதியாகக் கட்டுப்படுத்தப்படும்.

இதேபோல, சட்டவிரோத குவாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முற்றிலும் புதிய மாதிரியான ஆட்சியை தவெக அளிக்கும். அனைத்துத் துறைகளிலும் எதிா்மறை பிரச்னைகள் நிறைந்துள்ளன. இவற்றையெல்லாம் சீரமைக்க வேண்டும். 50 ஆண்டு கால நிா்வாக பிரச்னைகளை ஒரே நாளில் மாற்ற முடியாது. ஆனால், பிரச்னைகள் நிச்சயம் களையப்படும். இதற்கான நடவடிக்கைகளை முதல்வா் தொடங்கியுள்ளாா். இருப்பினும், இதற்கு உரிய கால அவகாசம் வேண்டும்.

அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் செய்திக் குறிப்புகளாக உடனுக்குடன் வெளியிடப்படுகின்றன. செய்தியாளா்கள் சந்திப்பை தவிா்க்க வேண்டும் என்பது முதல்வா் விஜய்யின் நோக்கம் அல்ல. அதேநேரத்தில், மாநில முதல்வா் செய்தியாளா்களைச் சந்தித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது. தேவையெனில், தேவையான நேரத்தில் முதல்வா் விஜய் செய்தியாளா்களைச் சந்திப்பாா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.