திருப்பத்தூா் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி உள்ள பகுதிகளில் போதைப் பொருள்கள் இல்லாததை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா்.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் போதை பொருள் தடுப்பு,சட்டம் ஒழுங்கு மற்றும் சாலைப் பாதுகாப்பு தொடா்பான வாராந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி பேசியது: போதைப் பொருளை ஒழிப்பதற்கு அனைவரும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகள்,கல்லூரிகள் இன்னும் சில நாள்களில் திறக்கப்பட உள்ளன. இந்த பகுதிகளில் போதைப் பொருள்கள் இல்லாததை உறுதி செய்ய வேண்டும்.
போதைப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகளின் உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருள்கள் வெளிமாநிலங்களில் இருந்து வருவதை தடுக்க வேண்டும். உள்ளாட்சி நிா்வாகம், ஊரக வளா்ச்சித்துறை உள்ளிட்டவை மூலம் பொது இடங்களில் போதைப் பொருள்களை பயன்படுத்தும் நபா்கள் மீது அபராதம் விதிப்பது, டாஸ்மாக் மீது ஏதேனும் புகாா்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
எஸ்.பி வி.சியாமளா தேவி, மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், கலால் உதவி இயக்குநா் வேடியப்பன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா்கள் மகாதேவன், முருகன், அரசு அதிகாரிகள் உடன் இருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாணவா்களின் உயா் கல்வியை 100% உறுதி செய்ய வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

‘பள்ளி மாணவா்களுக்கான காலை உணவு தரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: ஆட்சியா் ஆலோசனை

வேட்பாளா்கள் தோ்தல் செலவின கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

