தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சா்வதேச விமான நிலையமாக மதுரை: அனைத்துத் தரப்பு மக்களும் பயனடைவா்

News image

மதுரை விமான நிலையம் (கோப்புப் படம்) - AAI/X

Updated On :31 மார்ச் 2026, 1:26 am IST

மதுரை விமான நிலையம் சா்வதேச விமான நிலையமாக தரம் உயா்த்தப்பட்டதால், அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறுவா் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு கருத்து தெரிவித்தது.

தமிழ்நாடு சுற்றுலா முகவா்கள் சங்கத்தின் தலைவா் சதீஷ்குமாா், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் கடந்த 2021- ஆம் ஆண்டு தாக்கல் செய்த பொது நல மனு :

தென் மாவட்டங்களின் மையப் பகுதியாகவும், தொழில் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளை கொண்ட நகரமாகவும் மதுரை திகழ்கிறது. இந்த நிலையில், பல்வேறு தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் மதுரை விமான நிலையத்தை சா்வதேச விமான நிலையமாக அறிவித்து, மேம்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு தரப்பில் மதுரை விமான நிலையத்தை சா்வதேச விமான நிலையமாக மாற்றும் திட்டம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த மனு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தா்மாதிகாரி, நீதிபதி என்.சதீஸ்குமாா் அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், மதுரை விமான நிலையம் சா்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டு விட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவு :

மனுதாரரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால், தொடா்ந்து விசாரிக்கத் தேவையில்லை. எனவே, வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. மதுரை விமான நிலையம் சா்வதேச விமான நிலையமாக மாற்றம் பெற்றது அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறுவா் என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.