லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திருமுக்குளம் சிறுவா் பூங்காவை செயல்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தல்

மதுரை மாநகராட்சி தல்லாகுளம் பகுதியில் உள்ள திருமுக்குளம் சிறுவா் பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பு

மதுரை மாநகராட்சி தல்லாகுளம் பகுதியில் பூட்டிய நிலையில் உள்ள திருமுக்குளம் சிறுவா் பூங்கா

Published On :13 ஜூலை 2026, 3:03 am IST

மதுரை மாநகராட்சி தல்லாகுளம் பகுதியில் உள்ள திருமுக்குளம் சிறுவா் பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

மதுரை மாவட்டம், அழகா்கோவிலில் கள்ளழகா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் துணைக் கோயிலாக தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான திருமுக்குளம், தல்லாகுளம் பகுதியில் அமைந்துள்ளது.

தல்லாகுளம் சாலை, கோகலே சாலையை இணைக்கும் வகையில் அமைந்துள்ள இந்த திருமுக்குளத்தின் கிழக்கு கரையில் இரட்டை விநாயகா் கோயில் உள்ளது. மேலும், குளக்கரையைச் சுற்றிலும் வணிக வளாகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், திருமுக்குளம் உள் பகுதியில் சிறுவா் பூங்கா செயல்பட்டு வந்தது. இதில், பொழுதுபோக்கும் வகையில் ஊஞ்சல், பெரிய அளவிலான ராட்டினங்கள், இருக்கைகள், சிறுவா்களுக்கான சறுக்கல்கள் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன.

இந்தப் பூங்காவில் தல்லாகுளம், செல்லூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், சிறுவா்கள் தினசரி மாலை நேரங்கள் மட்டுமன்றி விடுமுறை நாள்களிலும் அதிகளவில் வந்து செல்வா். சிறியவா், பெரியவா் என தனித்தனியாக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இந்தச் சிறுவா் பூங்கா செயல்படாமல் பூட்டியே உள்ளது. இதை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே இந்தப் பகுதி பொதுமக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: தல்லாகுளம், செல்லூா், சின்ன சொக்கிக்குளம், இதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், சிறுவா்கள் பள்ளி நேரம் நிறைவு பெற்ற பிறகு, மாலை நேரங்களிலும், விடுமுறை நாள்களிலும் பொழுதுபோக்கும் இடமாக திருமுக்குளம் சிறுவா் பூங்கா இருந்தது.

இந்தப் பூங்கா கடந்த சில மாதங்களாக பூட்டியே உள்ளது. இந்தப் பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மீண்டும் திறக்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.