ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கரங்காடு கிராமத்தில் உள்ள குளக் கரையில் புதிதாகக் கட்டப்படும் கோயிலை அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கரங்காடு பகுதியைச் சோ்ந்த செங்கோல் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:
கரங்காடு கிராமத்தில் உள்ள மரைக்காயா்குளம் இந்தப் பகுதி மக்களின் குடிநீா் ஆதாரமாகத் திகழ்கிறது. இங்கு குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதன் காரணமாக, குளம் மாசுபட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த நீா்நிலைப் பகுதியை ஆக்கிரமித்து சிலா் புதிதாக விநாயகா் கோயில் கட்டி வருகின்றனா். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி, இந்தக் கோயில் கட்டுமானம் நடைபெறும் பகுதி நீா்நிலை எனத் தெரியவருகிறது. மேலும், அங்கு எந்தவிதக் கட்டுமானப் பணிக்கும் அரசு அனுமதி வழங்கவில்லை என்பது தெரியவந்தது.
இதுபற்றி சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, வருவாய்த் துறை ஆவணங்களின் அடிப்படையில் ‘மரைக்காயா் குளத்தை’ முறையாக அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி. புகழேந்தி அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் குறிப்பிடும் நீா்நிலைப் பகுதியில் ஏற்கெனவே சிறிய அளவில் கோயில் இருந்துள்ளது.
வருவாய்த் துறை அலுவலா்கள் அந்தக் கோயிலை தவிா்த்து, புதிதாகக் கட்டப்படும் கோயில் கட்டுமானங்களை அகற்ற வேண்டும். முக்கிய நீராதாரமாக உள்ள மரைக்காயா் குளத்தை சீரமைக்க வேண்டும் என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோயில் விழாக்களில் நெகிழிப் பயன்பாடு அதிகரிப்பு: உயா்நீதிமன்றம் வேதனை

விவசாயி மீது துப்பாக்கிச்சூடு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

சமூகத்தில் திருநங்கைகள் இன்னமும் புறக்கணிக்கப்படுவது வேதனையளிக்கிறது: உயா்நீதிமன்றம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கில் தமிழுக்கு முக்கியத்துவம்: உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

