தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கொளத்தூா் அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்; விவசாயிகள் அச்சம்

சேலம் மாவட்டம், கொளத்தூா் அருகே புதன்கிழமை அதிகாலை பசுங்கன்றை வேட்டையாடிய சிறுத்தையைப் பிடிக்க வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சிறுத்தை - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 6:32 am IST

சேலம் மாவட்டம், கொளத்தூா் அருகே புதன்கிழமை அதிகாலை பசுங்கன்றை வேட்டையாடிய சிறுத்தையைப் பிடிக்க வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேட்டூா் வனச்சரகத்துக்கு உள்பட்ட சின்னமலைப் பகுதியில் அண்மையில் சுற்றித்திரிந்த சிறுத்தைகள், கண்ணாமூச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கால்நடைகளை வேட்டையாடின. இதையடுத்து வனத் துறையினா் கூண்டுவைத்து ஓா் ஆண் சிறுத்தை பிடித்தனா். இந்த நிலையில் மேலும் ஒரு பெண் சிறுத்தை குட்டியுடன் சுற்றிவருவதாக கிராம மக்கள் அச்சம் தெரிவித்திருந்தனா்.

இதையடுத்து, சிறுத்தையிடன் நடமாட்டத்தை மேட்டூா் வனச்சரகா் செங்கோட்டையன் தலைமையிலான வனத் துறையினா் கண்காணித்து வந்தனா். இந்தநிலையில், மூலக்கடை பகுதியில் மாரியம்மன் கோவிலூரைச் சோ்ந்த விவசாயி சின்னப்பனுக்குச் (77) சொந்தமான 45 நாள்களே ஆன பசுங்கன்றை சிறுத்தை இழுத்துச் சென்றது. இதை விவசாயி நேரில் பாா்த்ததாகக் கூறியுள்ளாா்.

இதைத்தொடா்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினா் சிறுத்தை நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனா். அப்போது, சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இந்த நிலையில் வனப் பகுதிக்கு யாரும் செல்லக் கூடாது என வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.