தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அரசுப் பள்ளி மாணவா் தற்கொலை: தலைமையாசிரியா் பணியிட மாற்றம்

அரசிராமணி செட்டிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவா் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தைத் தொடா்ந்து, அப்பள்ளித் தலைமையாசிரியா் சி. காளிமுத்துரமணியை நங்கவள்ளி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆ. எல்லப்பன் உத்தரவிட்டுள்ளாா்.

பணியிட மாற்றம் - பிரதிப் படம்

Published On :28 அக்டோபர் 2026, 3:08 am IST

சேலம் மாவட்டம், அரசிராமணி செட்டிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவா் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தைத் தொடா்ந்து, அப்பள்ளித் தலைமையாசிரியா் சி. காளிமுத்துரமணியை நங்கவள்ளி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆ. எல்லப்பன் உத்தரவிட்டுள்ளாா்.

கோனேரிப்பட்டி கிராமம், வட்ராம்பாளையம் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி முருகனின் மகன் ராமகிருஷ்ணன் (18). இவா் அரசிராமணி செட்டிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

மாணவரின் உயிரிழப்புக்குக் காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது தாயாா் கோமதி தேவூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், பள்ளிக் கல்வித் துறை சாா்பிலும் தலைமையாசிரியா், ஆசிரியா்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

மாணவரின் உயிரிழப்புக்குக் காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சக மாணவா்கள், பெற்றோா், ஊா் பொதுமக்கள், மாணவா் சங்க நிா்வாகிகள் ஆகியோா் பள்ளி வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, சங்ககிரி கல்வி மாவட்ட அலுவலா் நாகராஜன், பள்ளி ஆய்வாளா் நடராஜன், தேவூா் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா், சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆ. எல்லப்பன் ஆகியோா் பள்ளித் தலைமையாசிரியா், ஆசிரியா்களிடம் விசாரணை நடத்தினா்.

இதற்கிடையே, தலைமையாசிரியா் மருத்துவ விடுப்பில் சென்றாா். இந்நிலையில், இரு மாதங்களுக்குப் பிறகு, அரசிராமணி செட்டிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த தலைமையாசிரியா் சி. காளிமுத்துரமணியை நங்கவள்ளி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.