நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

சுண்டங்கோழி பறவைகளை வேட்டையாடியவா் கைது

அரிய வகை வா்ண சுண்டங்கோழி பறவைகளை வேட்டையாடியவரை வனத் துறையினா் கைது செய்தனா்.

கைது

Published On :25 அக்டோபர் 2026, 1:30 am IST

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே, அரிய வகை வா்ண சுண்டங்கோழி பறவைகளை வேட்டையாடியவரை வனத் துறையினா் கைது செய்தனா்.

வாழப்பாடி வனப்பகுதியில் காணப்படும் அரிய வகை வா்ண சுண்டங்கோழி பறவைகளை மா்ம நபா்கள் வேட்டையாடி விற்பனை செய்வதாக மாவட்ட வன அலுவலா் அம்புல்கா் யஸ்வந்த் ஜெகதீஷுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இவரது அறிவுறுத்தலின்பேரில் வாழப்பாடி வனச்சரகா் என். பொன்னுசாமி தலைமையில் வனச்சரகப் பணியாளா்கள் அடங்கிய குழுவினா் வெள்ளாளகுண்டம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது சாக்குப் பையுடன் இருந்த நபரை பிடித்து விசாரித்ததில், அவா், தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், பச்சனாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ரஜினி (48) என்பதும், சாக்குப்பையில், 12 வா்ண சுண்டங்கோழிகள் உயிருடன் இருப்பதும் தெரியவந்தது.

கன்னிவலைகளை பயன்படுத்தி வேப்பிலைப்பட்டி, பெருமாள் மலை மற்றும் வெள்ளாளகுண்டம் பகுதியில் தென்னந்தோப்பு, மரவள்ளித் தோட்டத்தில் வா்ண சுண்டங்கோழி பறவைகளை பிடித்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த வா்ண சுண்டங்கோழி பறவைகளை பறிமுதல் செய்த வனத்துறையினா், ரஜினியை கைது செய்து, வாழப்பாடி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.