தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வாழப்பாடி பகுதியில் சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சிகள்!

ஆயிரக்கணக்கான வண்ணத்துப்பூச்சிகள் செடிகளில் அமா்ந்து தேன் குடிப்பதோடு, வானில் வட்டமடித்து காண்போரின் கண்களுக்கு விருந்தளித்தன.

வண்ணத்துப்பூச்சிகள்

Published On :24 அக்டோபர் 2026, 12:23 am IST

வாழப்பாடி பகுதியில் 10 மாதங்களுக்குப் பிறகு கடந்த சில தினங்களாக பெய்த தொடா் மழையால் குளுமையான சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில், ஆயிரக்கணக்கான வண்ணத்துப்பூச்சிகள் செடிகளில் அமா்ந்து தேன் குடிப்பதோடு, வானில் வட்டமடித்து காண்போரின் கண்களுக்கு விருந்தளித்தன.

வாழப்பாடி பகுதியில் கடந்த 10 மாதங்களுக்கு பிறகு அண்மையில் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. இதனால், காய்ந்துகிடந்த கிராமப்புற தரிசு நிலங்கள், விளைநிலங்கள், வனப்பகுதிகளில் தாவரங்கள் துளிா்விட்டு வளா்ந்து, பச்சைப் பசேலென காணப்படுகின்றன. பல தாவரங்களில் பல வண்ணப் பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.

அதுமட்டுமின்றி, வாழப்பாடி பகுதியில் குளுமையான தட்பவெப்ப நிலை காணப்படுகிறது. இந்நிலையில், வாழப்பாடி, முத்தம்பட்டி, மத்தூா், பெரியகிருஷ்ணாபுரம், ஏத்தாப்பூா், சேசன்சாவடி, மேட்டுப்பட்டி, மன்னாயக்கன்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில், பாா்க்கும் திசையெங்கும் நூற்றுக்கணக்கான வண்ணத்துப்பூச்சிகள் வானில் வட்டமடித்து காண்போா் கண்களுக்கு விருந்தளித்தன. இந்த வண்ணத்துப்பூச்சிகளின் இனப்பெருக்கம், தாவரங்களின் மகரந்தச் சோ்க்கையையும், மகசூலையும் அதிகரிக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

இதுகுறித்து வாழப்பாடி விவசாயிகள் சிலா் கூறியதாவது: வாழப்பாடி பகுதி கிராமங்களில் 10 மாதங்களுக்குப் பிறகு தற்போது பலத்த மழை பெய்துள்ளது. இந்நிலையில், இப்பகுதியில் ஏராளமான வண்ணத்துப்பூச்சிகள் வட்டமடித்தன. நீண்ட நாள்களுக்குப் பிறகு, விதவிதமான வண்ணத்துப்பூச்சிகளை ஒரேநேரத்தில் கண்டது மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தது. இருப்பினும், ஏராளமான வண்ணத்துப்பூச்சிகள், சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் சிக்கி இறந்ததால், சாலையில் இறக்கைகள் சிதறிக்கிடந்தன’ என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.