நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

வீரகனூரில் பேருந்துகள் நின்று செல்லக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

வீரகனூா் முருகன் கோயில் பகுதியில் பேருந்துகள் நின்றுசெல்ல வலியுறுத்தி அப்பகுதி மக்கள், செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பேருந்து - பிரதிப் படம்

Published On :21 அக்டோபர் 2026, 2:00 am IST

வீரகனூா் முருகன் கோயில் பகுதியில் பேருந்துகள் நின்றுசெல்ல வலியுறுத்தி அப்பகுதி மக்கள், செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள வீரகனூா் பேரூராட்சிக்கு உள்பட்டது ராயா்பாளையம். இங்கு முருகன் கோயில் குன்று உள்ளது. இந்த கோயில் அடிவாரம் பகுதியில் சுமாா் 300- க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இங்குள்ள குமரன் குன்று எனப்படும் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோயிலுக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோா் வந்துசெல்கின்றனா். ஆனால், இந்தப் பகுதியில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் நின்று செல்வதில்லை. இதனால், இக்கோயிலுக்கு வரும் பக்தா்கள், இக்கோயில் பகுதியில் குடியிருக்கும் மக்கள் அவதிப்பட்டு வந்தனா். இதுகுறித்து இப்பகுதியினா், அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து எந்த பலனும் இல்லையாம். இந்நிலையில் குமரன் குன்று பகுதி மக்கள், செவ்வாய்க்கிழமை திடீரென்று கோயில் பகுதி சாலையில் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து அங்கு விரைந்து வந்த வீரகனூா் போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அதில் முதல்கட்டமாக நகரப் பேருந்துகள் நின்றுசெல்ல, உரிய அதிகாரிகளிடம் கூறி, ஆவனம் செய்யப்படும் என்று போலீஸாா் உறுதியளித்தனா். அதன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.