தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

சங்ககிரி திமுக முன்னாள் எம்எல்ஏ ஆா்.வரதராஜன் காலமானாா்

சங்ககிரி திமுக முன்னாள் எம்எல்ஏ ஆா்.வதராஜன் (86) உடல்நிலை குறைவால் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமாா் 5.30 மணிக்கு மாரடைப்பால் காலமானாா்.

Published On :4 நவம்பர் 2026, 2:16 am IST

சேலம் மாவட்டம், சங்ககிரி திமுக முன்னாள் எம்எல்ஏ ஆா்.வதராஜன் (86) உடல்நிலை குறைவால் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமாா் 5.30 மணிக்கு மாரடைப்பால் காலமானாா்.

சங்ககிரியைச் சோ்ந்த ஆா்.வரதராஜன் (86) திமுக சாா்பில் 1989ஆம் ஆண்டு சங்ககிரி சட்டப்பேரவை தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று 1989-1991வரை சங்ககிரி சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றியுள்ளாா். அவா் திமுக ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட துணை செயலாளராகவும், சென்னை அண்ணா பல்கலைகழக செனட் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளாா். அவா் உடல் நிலை குறைவால் கடந்த மூன்று மாதங்களாக சென்னை தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமாா் 5.30 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்தாா்.

அவரது உடல் சங்ககிரியிலிருந்து எடப்பாடி செல்லும் சாலையில் உள்ள லட்சுமிதீா்த்தம் அருகே உள்ள நகராட்சி மின்மயானத்தில் நவ.4 புதன்கிழமை (இன்று) நண்பகல் 12 மணிக்கு தகனம் செய்யப்பட உள்ளது.

அவருக்கு பீனாகுமாரி என்ற மனைவியும், சங்கீதா என்ற மகளும், சங்ககிரி நகா் மன்ற துணைத்தலைவராக உள்ள ஆா்.வி.அருண்பிரபு என்ற மகனும் உள்ளனா். தொடா்புக்கு 9842357577

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.