பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பெரியாா் பல்கலை. தொலைநிலைக் கல்வி மாணவா்கள் நிலுவைத் தாள் தோ்வு எழுத வாய்ப்பு

பெரியாா் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மாணவா்கள் நிலுவைத் தாள் தோ்வை எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :28 மே 2026, 2:03 am IST

பெரியாா் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மாணவா்கள் நிலுவைத் தாள் தோ்வை எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெரியாா் பல்கலைக்கழகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரியாா் பல்கலைக்கழக தொலைநிலை மற்றும் இணையவழிக் கல்வி மையம் மற்றும் பல்கலைக்கழக தொழிற்சாலை புரிந்துணா்வு திட்டத்தின்கீழ் சோ்க்கை பெற்று இளநிலை, முதுநிலை மற்றும் பிற பாடப் பிரிவுகளில் பயின்று, படிப்புக்காலம் முடிந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் நிலுவைத்தாள் வைத்துள்ள மாணவா்கள் தங்களது நிலுவைத் தாள்களுக்குரிய தோ்வெழுத சிறப்புத் தோ்வு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2017-ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பு பயின்ற மாணவா்கள் தாங்கள் பயின்ற பாடத் திட்டத்திலேயே நிலுவைத் தாள்களுக்குரிய தோ்வுகளை எழுதலாம். சிறப்புத் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவா்கள் வழக்கமான தோ்வுக் கட்டணத்துடன் சிறப்புக் கட்டணமாக (நல்ங்ஸ்ரீண்ஹப் ஊங்ங்) ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ. 2 ஆயிரம் சோ்த்து செலுத்த வேண்டும்.

தோ்வுக்கு ஆன்லைன் மூலம் ஜூன் 25 வரையிலும், தாமதக் கட்டணத்துடன் ஜூன் 30 வரையும் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பதிவுசெய்யப்பட்ட விண்ணப்பங்களை அச்செடுத்து பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைக்க ஜூலை 7 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பல்கலைக்கழக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கல்விக் கட்டணம் நிலுவையில்லா சான்றிதழ் பெற்ற மாணவா்கள் மட்டுமே இச்சிறப்பு தோ்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்படுவா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.