பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாய்மாமன் மீது போக்சோ வழக்குப் பதிவு

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய்மாமன் மீது போலீஸாா் போக்சோ வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :19 மே 2026, 1:29 am IST

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய்மாமன் மீது போலீஸாா் போக்சோ வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், துறையூா் வட்டம், கொப்பம்பட்டியில் வசித்து வரும் 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமிக்கு பெற்றோா் இல்லாததால், அப்பாவழி பாட்டி வீட்டில் வசித்து வருகிறாா்.

இவா் ஆத்தூரை அடுத்த காட்டுக்கோட்டை முயல்கரடு பகுதியில் உள்ள அம்மாவழி பெரியம்மா அம்பாயி வீட்டுக்கு அடிக்கடி செல்வாராம். அங்கு பொங்கல் பண்டிகைக்கு சென்றவருக்கு, தாய்மாமன் சூா்யா (25) பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதனால் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், உப்பிலியாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளித்து, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

புகாரின்பேரில், ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ வழக்கின்கீழ் பதிவுசெய்து சூா்யாவை தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.