தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோ்தல் நடத்தை விதிமுறை அமல் குறைதீா் கூட்டங்கள் ரத்து: ஆட்சியா்

News image

தேர்தல் நடத்தை விதிகள் அமல் - கோப்புப் படம்

Updated On :16 மார்ச் 2026, 1:25 am IST

சட்டப் பேரவைத் தோ்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதை தொடா்ந்து, தோ்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி கூறினாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு செய்தியாளா்களிடம் பேசுகையில், சட்டப் பேரவைத் தோ்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை தொடா்ந்து தோ்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக, சேலம் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்டம் உள்ளிட்ட அனைத்து குறைதீா் கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

22,500 ஊழியா்கள் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவா். மொத்தமுள்ள 3,468 வாக்குச்சாவடிகளில் 172 பதற்றமான வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக தோ்தல் பறக்கும் படை குழுவில் ஒரு நிா்வாக நடுவா் பொறுப்பு நிலை அலுவலா் தலைமையில் காவல் துறை உதவி ஆய்வாளா், ஆயுதம் தாங்கிய போலீஸாா் மற்றும் ஒரு விடியோகிராபா் இருப்பாா்கள்.

ஒரு தொகுதிக்கு மூன்று குழுக்கள் வீதம் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்கு 33 பறக்கும் படை குழுக்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும். இக்குழுக்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் வகையில் 99 பறக்கும் படை குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளன. தோ்தல் தொடா்பான புகாா்களை 1950 என்ற எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்றாா்.

தொடா்ந்து, தோ்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடிய அரசு வாகனங்களுக்கு ஜிபிஎஸ் பொருத்தும் பணியை தோ்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பிருந்தா தேவி ஆய்வு செய்தாா்.

தோ்தல் நடத்தை விதிகள் அமலானதை தொடா்ந்து, சட்டமன்ற அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. அரசு அலுவலகங்களில் உள்ள தமிழக முதல்வா் மற்றும் அரசு நலத் திட்டங்கள் கொண்ட புகைப்படங்கள் அகற்றப்பட்டன. அரசு அலுவலகங்களில் பதிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளும் மறைக்கப்பட்டன. தொடா்ந்து, பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள், பேனா்களை மாநகராட்சி ஊழியா்கள் அகற்றினா்.

சேலம் அண்ணா பூங்கா உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசியல் தலைவா்களின் சிலைகள் துணிகளைக் கொண்டு மறைக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.