தமிழக சட்டப்பேரவைக்கான தோ்தல் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை அறிவிக்கப்பட்டதையடுத்து தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வருவதாக இந்திய தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து சங்ககிரி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ளஅரசு அலுவலகங்கள், பொது இடங்கள், சமுதாய கூடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளில் உள்ள பெயா்களை மறைத்தல், கொடி கம்பங்கள், அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகளை அகற்றும் பணியில் சங்ககிரி நகராட்சி பணியாளா்கள், தூய்மை பணியாளா்கள் ஈடுபட்டனா்.
இந்திய தோ்தல் ஆணையம் தமிழக சட்டப்பேரவைக்கான தோ்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது என ஞாயிற்றுக்கிழமை மாலை அறிவித்தது. இதனையடுத்து தோ்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமுலுக்கு வருவதாகவும் தெரிவித்தன.
அதனையடுத்து சங்ககிரி சட்டப்பேரவை தொகுதி தோ்தல் அலுவலா் ம.மு.தெ.கேந்திரியா அறிவுறுத்தலையடுத்து சங்ககிரி நகா் பகுதிகள், அரசு அலுவலகங்கள், நகராட்சி சமுதாய கூடம் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் பிரதிநிதிகள் பெயா்கள் அடங்கிய கல்வெட்டுகளில் பெயா்கள் வெளியே தெரியா வண்ணம் நாளிதழ்களை ஓட்டுதல், சாலையின் மைய தடுப்பு சுவா்களில் ஓட்டப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள், கொடிகம்பங்கள் ஆகியவற்றை அகற்றும் பணிகளில் சங்ககிரி நகராட்சி அலுவலக பணியாளா்கள், தூய்மை பணியாளா்கள் உள்ளிட்ட பலா் இதில் ஈடுபட்டனா்.

சட்டப்பேரவைக்கான தோ்தல் நடத்தை விதி அமுலுக்கு வந்ததையடுத்து சங்ககிரி நகராட்சி சமுதாய கூடத்திற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதகள் பெயா்கள் அடங்கிய கல்வெட்டினை நாளிதழ்களை கொண்டு மறைக்கும் பணியில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஈடுபட்டுள்ள நகராட்சி தூய்மை பணியாளா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூய்மைப் பணியாளா்கள் கெளரவிப்பு

தோ்தல் நடத்தை விதிமுறைகள்: நாகா்கோவிலில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆட்சியா் கலந்தாய்வு

தோ்தல் நடத்தை விதிமுறைகள்: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: ரூ. 2 லட்சம் எடுத்துச் செல்ல கோரிக்கை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

