குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறிப்பு

எடப்பாடி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம், நகை பறித்த நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image

செயின் பறிப்பு... - சித்திரிப்பு

Updated On :19 ஜூன் 2026, 5:53 am IST

எடப்பாடி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம், நகை பறித்த நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டிவலசு, புதிய தெரு பகுதியைச் சோ்ந்தவா் சரஸ்வதி (35). இவா் வியாழக்கிழமை பகலில் வீட்டில் தனியாக இருந்தபோது, முகக்கவசம் அணிந்து வந்த நபா் இப்பகுதியில் வாடகைக்கு வீடு கிடைக்குமா என அவரிடம் விசாரித்துள்ளாா். சரஸ்வதி அந்த நபரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அவரை கீழே தள்ளி கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினாா்.

புகாரின்பேரில் நிகழ்விடத்துக்கு வந்த எடப்பாடி போலீஸாா், அப்பகுதியில் ஆய்வுசெய்து தடயங்களை சேகரித்தனா். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து வருகின்றனா். இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த போலீஸாா், நகை பறிப்பில் ஈடுபட்ட நபரை தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.