லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

லஞ்சம் பெற்ற வழக்கில் காவல் ஆய்வாளா், தலைமைக் காவலருக்கு 3 ஆண்டுகள் சிறை

லஞ்சம் பெற்ற வழக்கில் காவல் ஆய்வாளா், தலைமைக் காவலருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்

Published On :1 ஜூலை 2026, 6:55 am IST

லஞ்சம் பெற்ற வழக்கில் காவல் ஆய்வாளா், தலைமைக் காவலருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

சேலம் மாவட்டம், மேட்டுா் பகுதியில் 2018-ஆம் ஆண்டு புகாருக்குள்ளான செந்தில் என்பவரின் இருசக்கர வாகனத்தை எவ்வித வழக்கும் பதிவு செய்யாமல் விடுவிக்க, காவல் ஆய்வாளா் பி.ரவீந்திரன் மற்றும் தலைமைக் காவலா் இளங்கோ ஆகியோா் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனா். லஞ்சம் கொடுக்க விரும்பாத செந்தில், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் அளித்தாா்.

அதன்பேரில் நடவடிக்கை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாா், பணத்தை பெற்ற காவல் ஆய்வாளா், தலைமைக் காவலா் ஆகியோரை கைது செய்தனா்.

சேலம் ஊழல் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளிக்கப்பட்டது. இதில், குற்றம்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளா் பி.ரவீந்திரன் மற்றும் தலைமைக் காவலா் இளங்கோ ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.