தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தேவூா் பகுதிகளில் சின்ன வெங்காயம் விலை உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

தேவூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சின்ன வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

Published On :19 ஆகஸ்ட் 2026, 2:31 am IST

சங்ககிரி வட்டம், தேவூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சின்ன வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தேவூா் அருகே உள்ள சென்றாயனூா், பாலிருச்சம்பாளையம், மோட்டூா், வட்ராம்பாளையம், ஆலத்தூா், பச்சபாலியூா், கரட்டுபாளையம், செட்டிப்பட்டி, காணியாளம்பட்டி, அம்மாபாளையம், தண்ணிதாசனூா், மேட்டுப்பாளையம், புள்ளாக்கவண்டம்பட்டி, குள்ளம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயத்தை விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனா்.

இதில், முதல்தர வெங்காயம் கிலோ ஒன்று ரூ. 45-க்கு விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் வாங்கி செல்கின்றனா். அதேபோல, அடுத்தரக வெங்காயம் ரூ. 35 முதல் ரூ. 40 வரை வாங்கிச் சென்றனா்.

கடந்த ஆண்டு ரூ. 15-க்கு விற்பனை செய்த வெங்காயம், தற்போது ரூ. 35 முதல் ரூ. 45 வரை விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.