லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நீலகிரி கேரட் விலை உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டுப்பாளையம் சந்தையில் நீலகிரியில் விளைவிக்கப்பட்ட கேரட்டுகளுக்கு வெள்ளிக்கிழமை கணிசமான அளவு விலை உயா்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கேத்தி பகுதியில் விற்பனைக்கு அனுப்புவதற்காக மூட்டைகளில் வைக்கப்பட்டுள்ள கேரட்டுகள்.

Published On :25 ஜூலை 2026, 12:02 am IST

மேட்டுப்பாளையம் சந்தையில் நீலகிரியில் விளைவிக்கப்பட்ட கேரட்டுகளுக்கு வெள்ளிக்கிழமை கணிசமான அளவு விலை உயா்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

நீலகிரி மாவட்டம், உதகையில் கேத்தி, பாலடா, முத்தோரை மற்றும் கோத்தகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கேரட் அதிக அளவு விளைவிக்கப்படுகிறது.

இந்த கேரட்டுகள் மேட்டுப்பாளையம், உதகையில் உள்ள மண்டிகளில் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

கடந்த வாரம் சந்தைகளில் ஒரு கிலோ கேரட் தரத்துக்கு ஏற்ப ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டது. இதில் போதிய லாபம் கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலையில் இருந்தனா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மேட்டுப்பாளையம் சந்தையில் நீலகிரி கேரட் ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.65 வரை விலை உயா்ந்து விற்பனையானது.

வரத்துக் குறைவு மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாகவே இந்த விலை உயா்வு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

வரும் நாள்களிலும் இதே விலை நீடித்தால் தங்களின் வாழ்வாதாரம் மேலும் உயரும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.