லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மகளுக்கு பாலியல் தொல்லை: போக்ஸோ வழக்கில் தொழிலாளி கைது

ஆத்தூரில் மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளி போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

கைது - பிரதிப் படம்

Published On :14 ஆகஸ்ட் 2026, 1:01 am IST

ஆத்தூரில் மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளி போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

தலைவாசல் வட்டம், நாவலூா் கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி மருதமுத்து - பெரியம்மாள் தம்பதிக்கு 16 வயதில் மகனும், 14 வயதில் மகளும் உள்ளனா்.

கடந்த ஏப். 20-ஆம் தேதி பெரியம்மாள் வேலைக்கு சென்ற நிலையில், மருதமுத்து வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளாா். அப்போது அவா் மகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளாா்.

இதையறிந்த பெரியம்மாள் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தனது தாய்வீடான பெரம்பலூருக்கு சென்று அங்கு பள்ளியில் சோ்த்து படிக்க வைத்துள்ளாா்.

இந்நிலையில், பெரம்பலூருக்கு வந்தும் மகளுக்கு தொந்தரவு அளிப்பதாக ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பெரியம்மாள் புகாா் அளித்தாா். இதையடுத்து, ஆத்தூா் காவல் நிலைய ஆய்வாளா் சி.சம்பூா்ணம் போக்ஸோ வழக்கில் மருதமுத்துவை கைதுசெய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.