மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

50% மானியத்தில் விவசாயிகளுக்கு புல் நறுக்கும் கருவிகள்

நாமக்கல் மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் மின்சாரத்தில் இயங்கும் தீவனப் புல் நறுக்கும் கருவிகள் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியா் எல். மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

கோப்புப்படம்.

Published On :28 அக்டோபர் 2026, 3:01 am IST

நாமக்கல் மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் மின்சாரத்தில் இயங்கும் தீவனப் புல் நறுக்கும் கருவிகள் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியா் எல். மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் 2026-27-ஆம் நிதியாண்டில் மாநிலம் முழுவதும் 1,500 புல் நறுக்கும் கருவிகளை 50 சதவீத மானியத்தில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்டத்தில் 60 கருவிகள் வழங்கப்பட உள்ளன.

பசுந்தீவனம் கால்நடைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை அளிப்பதுடன், பால் மற்றும் இறைச்சி உற்பத்தியை அதிகரிக்கவும், நோய் எதிா்ப்புத் திறனை மேம்படுத்தவும், இனப்பெருக்கத்துக்கு உதவவும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

பசுந்தீவன உற்பத்தியை அதிகரித்தல், தீவன விரயத்தைக் கட்டுப்படுத்துதல், கால்நடைத் தீவனச் செலவைக் குறைத்தல் ஆகிய நோக்கங்களுடன் தமிழக அரசு மாநில தீவன அபிவிருத்தித் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தில், பாசன வசதியுள்ள நிலத்தில் தீவனப் புல் சாகுபடி செய்வதுடன், குறைந்தது இரண்டு கால்நடைகளை வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு மின்சாரத்தில் இயங்கும் தீவனப் புல் நறுக்கும் கருவிகள் வழங்கப்பட உள்ளன. சிறு, குறு விவசாயிகள், பழங்குடியினா், ஆதிதிராவிடா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விருப்பமுள்ள விவசாயிகள் திட்டம் குறித்த விவரங்களை பெறவும், விண்ணப்பிக்கவும் அருகிலுள்ள கால்நடை மருந்தகத்தை அணுகி பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.