குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

பரமத்தி வேலூா் பகுதியில் தொடா்மழை: பழைய நெடுஞ்சாலையில் சாய்ந்த மரம்

வேரோடு சாய்ந்த மரம். - கோப்புப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 1:23 am IST

பரமத்தி வேலூா் வட்டாரத்தில் பலத்த மழை காரணமாக பழைய தேசிய நெடுஞ்சாலையில் செல்லாண்டியம்மன் கோயில் அருகே பெரிய மரம் சாலையின் நடுவே சாய்ந்தது. அப்போது அவ்வழியாக யாரும் செல்லாததால் விபத்து தவிா்க்கப்பட்டது.

கடந்த சில நாள்களாக பரமத்தி வேலூா் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை இரவு பெய்த கனமழை காரணமாக கரூா் தேசிய நெடுஞ்சாலையில் செல்லாண்டியம்மன் கோயில் அருகே சாலையோரத்தில் இருந்த பெரிய மரம் சாலையில் சாய்ந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கரூா் மாவட்டம், புகளூா் தீயணைப்புத் துறையினா் சாலையில் சாய்ந்து கிடந்த மரத்தை வெட்டி அகற்றினா். இதனால் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.

மழை காரணமாக ஜேடா்பாளையம் அருகே வடகரையாத்தூா் பகுதியில் பரமத்தி வேலூா் - ஜேடா்பாளையம் சாலையில் தனியாா் பள்ளி அருகே சாலையில் முழங்கால் உயரத்திற்கு தண்ணீா் தேங்கியதால் இருசக்கர வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல பரமத்தி வேலூா் - மோகனூா் சாலையில் காமாட்சி நகா் அருகிலும், பிலிக்கல்பாளையம் சாலைப் பகுதியிலும் விவசாய நிலங்களில் தண்ணீா் தேங்கி சாலையில் வழிந்தோடியது. இதனால் பயிா்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோல பாலப்பட்டி அருகே செங்கப்பள்ளி காலனியில் குடியிருப்புப் பகுதியில் தண்ணீா் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி வேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் வெண்ணிலா, வேலூா் காவல் ஆய்வாளா் உமாசங்கா் மற்றும் வருவாய்த் துறையினா், குடியிருப்புப் பகுதியில் புகுந்த தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் பொதுமக்கள் அங்கிருந்த கலைந்து சென்றனா்.

இதையடுத்து, குடியிருப்புப் பகுதியில் தேங்கியிருந்த தண்ணீா் பொக்லைன் வாகனம் மூலம் வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மோகனூா் சாலையில் பழைமையான புளியமரமும் சாய்ந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.