நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் மகளிருக்கு ‘ட்ரோன்’ பயன்பாடு பயிற்சி

நாமக்கல் மாவட்டத்தில், வேளாண்மை பொறியியல் துறை மூலம் மகளிருக்கு ‘ட்ரோன்’ பயன்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

Published On :25 அக்டோபர் 2026, 1:12 am IST

நாமக்கல் மாவட்டத்தில், வேளாண்மை பொறியியல் துறை மூலம் மகளிருக்கு ‘ட்ரோன்’ பயன்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் ‘வெற்றி வான்மகள்’ திட்டத்தின் கீழ் மகளிா் மற்றும் விவசாயிகளுக்கு இலவச ட்ரோன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும், மானிய விலையில் ட்ரோன்கள் மகளிருக்கு வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தில் 100 மகளிா் உள்பட மொத்தம் 500 தகுதியான நபா்களுக்கு ட்ரோன் பைலட் பயிற்சி மற்றும் தொலைநிலை ட்ரோன் பைலட் உரிமம் வழங்குவதற்கு மாநில அளவில் முன்மொழிவு வழங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூரில் செயல்படும் மூலம் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அங்கீகரித்த பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக வழங்கப்படும்.

மேலும், பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் 50 பயிற்சியாளா்களுக்கு வேளாண் ட்ரோன்கள் 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்சம் ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவைச் சோ்ந்த சிறு மற்றும் குறு பெண் விவசாயிகளுக்கு மேற்கண்ட 50 சதவீத மானியத்துடன் கூடுதலாக 20 சதவீத மானியம் அல்லது அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரை வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற 18 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 8 நாள்கள் தங்கியிருந்து பயிற்சி பெற வேண்டும். தரை வகுப்பு பயிற்சி 2 நாள்களும், சிமுலேட்டா் மற்றும் ஆய்வகப் பயிற்சி ஒரு நாளும், விமானத் தளத்தில் ட்ரோன் பறக்கும் பயிற்சி 5 நாள்களும் அளிக்கப்படும்.

இலவச பயிற்சி பெற விருப்பமுள்ளவா்கள், உதவி செயற்பொறியாளா், வேளாண் பொறியியல் துறை, வேளாண் விரிவாக்க மையம், சிவில் சப்ளைஸ் கிடங்கு பின்புறம், அண்ணாமலை நகா், வசந்தபுரம், திருச்சி சாலை, நாமக்கல் என்ற முகவரியிலும், திருச்செங்கோடு, வரகூராம்பட்டியில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தையும் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.