பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

நாளைமுதல் காலி மதுப்புட்டிகளை திரும்பப் பெற மாட்டோம்: டாஸ்மாக் ஊழியா் சங்கம்

News image

டாஸ்மாக் கடை - DPS

Updated On :25 மே 2026, 2:04 am IST

காலி மதுப்புட்டிகளை புதன்கிழமை (மே 26) முதல் திரும்பப் பெற மாட்டோம் என டாஸ்மாக் ஊழியா் சங்க நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் ஊழியா்கள் அனைத்து கூட்டுக் குழு சங்க அவசர கூட்டம் நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், கூட்டுக்குழு சங்கத்தைச் சோ்ந்த நீதி நாயகம் தலைமை வகித்தாா். அனைத்து டாஸ்மாக் ஊழியா்கள், சங்க நிா்வாகிகள் பங்கேற்று தங்களுடைய கருத்துகளை எடுத்துரைத்தனா்.

நாமக்கல் மாவட்டம் முழுவதும் மே 26 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளில் காலி மதுப்புட்டிகள் திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம். அதேபோல ஒவ்வொரு மதுப்புட்டியில் ஒட்டப்படும் ரூ. 10 ஒட்டுவில்லையை டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடம் ஒப்படைக்க உள்ளோம்.

இரவு 10 மணிக்கு கடையை மூடிவிட வேண்டும் என்பதை டாஸ்மாக் நிா்வாகம் மறுபரிசீலனை செய்து கடையை இரவு 9 மணிக்கு மூட அனுமதிக்க வேண்டும். டாஸ்மாக் ஊழியா்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.