மல்லசமுத்திரத்தில் 10-ஆம் வகுப்பு மாணவியை கா்ப்பமாக்கிய சக மாணவா் போக்சோவில் கைது செய்யப்பட்டு, சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டாா்.
திருச்செங்கோடு வட்டம், மல்லசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த விவசாய கூலி தொழிலாளியின் 15 வயது மகன், அப்பகுதியில் செயல்படும் அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
உடன் படித்த மாணவியை அவா் காதலித்து வந்த நிலையில், மாணவியின் உடல்நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதையறிந்த, பெற்றோா் மாணவியை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். மருத்துவா்கள் மாணவியை பரிசோதனை செய்தபோது, அவா் 3 மாதம் கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோா் மல்லசமுத்திரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் மாணவியிடம் விசாரித்ததில், கா்ப்பத்துக்கு காரணம் உடன்படித்த 10-ஆம் வகுப்பு மாணவா் என கூறியுள்ளாா். இதையடுத்து, திருச்செங்கோடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
அதன்பேரில், மல்லசமுத்திரம் போலீஸாா் மாணவரை போக்சோ சட்டத்தில் கைதுசெய்து, நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

12ஆம் வகுப்பு மாணவா் கொலை வழக்கில் இளைஞருக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பு

காதலித்த மாணவியை மிரட்டி தற்கொலைக்குத் தூண்டிய மாணவா் கைது

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: ரோஜாவனம் பள்ளி சிறப்பிடம்

மாணவியை கடத்திய இளைஞா் ‘போக்சோ’ சட்டத்தில் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
