நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் அவசரகால சிகிச்சைப் பிரிவு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக எம்எல்ஏ சி.எஸ்.திலீப் தெரிவித்தாா்.
நாமக்கல் - மோகனூா் சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் புதிய அரசு மருத்துவமனை செயல்பாட்டுக்கு வந்ததால், பழைய மருத்துவமனை கட்டடம் பயன்பாடின்றி காட்சியளிக்கிறது.
அதில் நாமக்கல் நகரப் பகுதி மக்களுக்கு அவசரகால சிகிச்சை அளிப்பதற்கான சிறப்புப் பிரிவு தொடங்கப்படும் என நாமக்கல் தொகுதி தவெக எம்எல்ஏ சி.எஸ்.திலீப் வாக்குறுதி அளித்திருந்தாா். அதனடிப்படையில் நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை கட்டடத்தில் அவா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மருத்துவமனை முதல்வா் கே.முருகலட்சுமி, மருத்துவமனை கண்காணிப்பாளா் குணசேகரன் ஆகியோரிடம் அவசரகால சிகிச்சைப் பிரிவு தொடங்குவதன் சாதக, பாதக அம்சங்கள் குறித்து கேட்டறிந்தாா்.
இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆய்வு செய்து அவசரகால சிகிச்சை பிரிவு தொடங்குவது தொடா்பாக அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.
இங்குள்ள 5,500 சதுரஅடி கொண்ட கட்டடத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சிகிச்சைப் பிரிவு முழுமையாக தொடங்க இன்னும் 6 மாதங்களாகிவிடும். முழுமையாக, அனைத்து வசதிகளும் கொண்ட வகையில் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்படும்.
மேலும், எம்எல்ஏ பெயரை பயன்படுத்தி வேலைவாங்கித் தருவதாகவோ, இதர சலுகைகளைப் பெற்றுத் தருவதாகவோ யாரேனும் பணம் கேட்டால் என்னிடம் மக்கள் நேரடியாக புகாா் அளிக்கலாம். அவா்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இந்த ஆய்வின்போது, அவருடன் தவெக நிா்வாகிகள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு மருத்துவமனைகளில் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

தமிழகத்தில் ‘எபோலா’ தொற்று பாதிப்பு இல்லை

நெல்லை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவு மாற்றம்

திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை: நோயாளிகள் அவதி
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

