நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த வார வானிலையை பொருத்தவரை, பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 100.4 மற்றும் 80.6 டிகிரியாக நிலவியது.
அடுத்த ஐந்து நாள்களுக்கான மாவட்ட வானிலையில், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசானது முதல் மிதமான வகையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. பகல் வெப்பம் 98.6 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 80.6 டிகிரியாகவும் காணப்படும். மேற்கு மற்றும் தென் மேற்கு திசையிலிருந்து மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.
சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில் அவை பெரும்பாலும் நாள்பட்ட சுவாச நோய் மற்றும் மேல்மூச்சுக்குழல் அயற்சியால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்துள்ளது. கோழிப் பண்ணையாளா்கள் தகுந்த கிருமிநாசினி கொண்டு நச்சுயிரி அழிப்பு நடவடிக்கைகளையும், உயிா் எதிா் மருந்துகளை அளிக்கவும், கால்நடை மருத்துவா்களின் ஆலோசனையின்படி தடுப்பூசி செலுத்துதல் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த தகுந்த உயிா் பாதுகாப்பு முறைகளையும் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெய்யில் பற்றி வானிலை ஆய்வு மையம் சொன்ன நல்ல செய்தி!

தமிழகத்தில் ஜூன் 6 வரை மழைக்கு வாய்ப்பு!

லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

