தொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

பரமத்தி அருகே பேருந்து மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற பெண் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :16 ஜூன் 2026, 1:41 am IST

பரமத்தி வேலூா் அருகே கோனூரில் ஆம்னி பேருந்து மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற பெண் உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், கணவாய்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் தங்கவேல் (62). இவரது மனைவி மீனா (59). இவா் பரமத்தி அருகே கோனூா் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் வேலை பாா்த்து வந்தாா்.

இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை கோழிப்பண்ணைக்கு எதிரே உள்ள கடைக்கு செல்வதற்காக கரூா் -சேலம் சாலையைக் கடக்க முயன்றபோது நாமக்கலில் இருந்து கரூா் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவா் உயிரிழந்தாா்.

பரமத்தி போலீஸாா் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.