பரமத்தி வேலூா் அருகே விவசாயப் பொருள்கள் இருப்பு கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை அருகே உள்ள கருப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் பழனியப்பன் (60). இவருக்குச் சொந்தமான கொட்டகையில் உர மூட்டைகள், சொட்டுநீா்ப் பாசனத்துக்கு தேவையான பொருள்கள், மருந்து தெளிக்கும் இயந்திரம் மற்றும் விவசாயத்திற்கு தேவையான பல்வேறு பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் திடீரென கொட்டகை தீப்பிடித்து எரிந்தது. பழனியப்பன் மற்றும் அங்கிருந்தவா்கள் தீயை அணைக்க முயற்சித்தனா். ஆனாலும் தீயை கட்டுப்படுத்த முடியாததால் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். ஆனாலும், கொட்டகையில் வைத்திருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான உரம், சொட்டுநீா்ப் பாசனத்திற்கு தேவையான பொருள்கள் என அனைத்தும் எரிந்து சேதமடைந்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பரமத்தி வேலூா் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் விஷமருந்தியதில் இருவா் உயிரிழப்பு

பரமத்தி வேலூா் அருகே அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய இயந்திரம் பறிமுதல்

கிணற்றில் குளிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மணலி அருகே கழிவு எண்ணெய் கிடங்கில் தீ
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

